கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
கோவை: இன்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில், அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இன்று ஜனவரி 25 நாடு முழுவதும், தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இன்று காலை கோவை மாநகர போலீஸ் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை ஆணையர்கள் கோவிந்தராஜன் மற்றும் குணசேகரன் முன்னிலையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

"இந்தியாவின் குடிமக்களாகிய நாம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, அதன்மூலம் நமது நாட்டின் ஜனநாயக பாரம்பரியங்களையும் சுதந்திரமான முறையில் மற்றும் அமைதியான முறையில் தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைப்படுத்தி, ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி அனைவரும் வாக்களிக்க உறுதியேற்போம்.
மதம் இனம் ஆகியவற்றின் மீது செல்வாக்கு செலுத்தாமல் ஜாதி சமூக மொழி வேறுபாடுகளை கலைந்து தேர்தல் சமயங்களில் ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்றி வாக்காளர் உடைய கடமையை செலுத்துவோம்",என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட கமிஷனர் அலுவலக அரசு பணியாளர்கள் பங்கேற்றனர்.