கோவை: கோவையில் 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் திருமணத்துக்கு மறுத்ததால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையைச் சேர்ந்தவர் யாகூப் (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது.
தொடர்ந்து அந்தச் சிறுமியிடம் திருமண ஆசை கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார். இதையடுத்து அந்தச் சிறுமிதன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் கருவை கலைத்து விடு என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய சிறுமி கர்ப்பத்தை கலைத்துவிட்டார். அதன்பிறகு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்ட சிறுமியை நீ யார் என்று எனக்குத் தெரியாது என்று கூறிய அந்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கோவை குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.