கோவை: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி பிப்ரவரி 15-ந்தேதி 73 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பார்கள் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
கோவை: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி பிப்ரவரி 15-ந்தேதி 73 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பார்கள் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு 73 ஜோடி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மணமக்களுக்கு 73 வகையான சீர்வரிசையுடன் பிப்ரவரி 15 தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கால்கோள் நடும் விழா பேரூர் செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, `ஆண்டுதோறும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட அதிமுக சார்பில் ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.
வருகின்ற பிப்ரவரி 15ம்- தேதி நடைபெறும் திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளது. இதனால் அனைத்து மக்களும் ஜெயலலிதாவை நினைவு கூர்கின்றனர்.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் முதல்வர் வேட்பாளரை அறிவித்தவுடனே முதல்வரின் வெற்றி உறுதியாகிவிட்டது. இதற்கு கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மக்களே சாட்சி' என தெரிவித்தார்.