கோவை: கோவையில் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- கொரோனா தடுப்பூசி கடந்த 16-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. கோவைக்கு இரண்டாம் கட்டமாக 42,400 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவையில் முதல் கட்டமாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள 58 ஆயிரம் பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, சீதாலட்சுமி நகர் நல மையம், தாளியூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுவரை, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 42 ஆயிரத்து 400 தடுப்பு ஊசி கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களிடையே நிலவி வந்த அச்சம் தயக்கம் குறைந்துள்ளது.
இதுவரை தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. தற்போது, இரண்டாம் கட்டமாக செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு ரமேஷ் குமார் தெரிவித்தார்.