வால்பாறையில், காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்!

வால்பாறை: வால்பாறையில், காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார்.


வால்பாறை: வால்பாறையில், காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது அனலீ எஸ்டேட். இங்கு தொழிலாளியாக உள்ளவர் பெரியான். இவர் தேயிலைத் தோட்டத்தில் இருந்து அவரது வீட்டுக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேயிலைத் தோட்டத்தில் இருந்து காட்டு யானை ஒன்று சாலையில் வருவதைக் கவனிக்காமல் பெரியான் சென்றார்.

யானை இவரது அருகே வந்ததும் யானையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், அந்த யானை தும்பிக்கையை நீட்டி அவரைத் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.

அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...