ஆன்லைன்‌ பஞ்சாயத்து, வெள்ள பாதிப்பைத் தடுக்க நிரந்தரத்‌ தீர்வு: மக்கள்‌ நீதி மய்யக் கட்சி கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி உறுதிமொழியில் அறிவிப்பு!

சென்னை: ஆன்லைன் மூலம் பஞ்சாயத்து நடவடிக்கைகளை மக்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்வது மற்றும் வெள்ள பாதிப்பைத் தடுக்க நிரந்தரத்‌ தீர்வு காண்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை மக்கள்‌ நீதி மய்யக் கட்சி வெளியிட்டுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி உறுதிமொழியில் கூறியுள்ளது.


சென்னை:ஆன்லைன் மூலம் பஞ்சாயத்து நடவடிக்கைகளை மக்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்வது மற்றும் வெள்ள பாதிப்பைத் தடுக்க நிரந்தரத்‌ தீர்வு காண்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை மக்கள்‌ நீதி மய்யக் கட்சி வெளியிட்டுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி உறுதிமொழியில் கூறியுள்ளது.

கிராமப்புற உள்ளாட்சிக்கான உறுதிமொழிகள் வருமாறு:-

1. பஞ்சாயத்துகளின்‌ மூன்று அடுக்குகளுக்குமான நிதி திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு.

2. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி, செயல்பாடுகள்‌ மற்றும்‌ செயல்பாட்டாளர்கள்‌ கிடைக்கச்‌ செய்தல்‌.

3. ஆன்லைன்‌ பஞ்சாயத்துகள்‌: கிராம சபை தீர்மானங்கள்‌, அவற்றின்‌ தற்போதைய நிலை மற்றும்‌ ஊராட்சியின்‌ ஒட்டுமொத்த வரவு-செலவு விவரங்களை ஒருங்கிணைந்த முறையில்‌ இணையம்‌ மற்றும்‌ செயலியின்‌ வழியாக மக்கள்‌ கண்காணிக்க வழிவகை செய்யப்படும்‌.

4. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள்‌ முன்வைக்கும்‌ பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காக உள்ள தமிழக உள்ளாட்சி முறைமன்ற நடுவத்தின்‌ அதிகார வரம்பின்‌ கீழ்‌ கிராமப்புற உள்ளாட்சிகளும்‌ கொண்டுவரப்படும்‌. இது மாநில, மாவட்ட அளவிலான முறைமன்ற நடுவமாக செயல்படும்‌.

5. உள்ளாட்சிப்‌ பிரதிநிதியை திரும்பப்பெறும்‌ உரிமை: கிராம சபைகள்‌ வலுவாக்கப்பட்டு, உள்ளாட்சிப்‌ பிரதிநிதியை திரும்பப்பெறும்‌ உரிமையானது கிராம சபைகளுக்குக்‌ கொடுக்கப்படும்‌.

6. உள்ளாட்சி நிர்வாகத்தில்‌ திறன்‌ மேம்பாடு மற்றும்‌ ஆராய்ச்சிக்காக மாநில அளவில்‌ ஒரு தன்னாட்சி நிறுவனத்தை உருவாக்குதல்‌.

7. பஞ்சாயத்து தலைவர்‌ மற்றும்‌ கவுன்சிலர்களுக்கான ஊதியம்‌.

நகர்ப்புற உள்ளாட்சிக்கான உறுதிமொழிகள்‌ வருமாறு:-

1. ஒருங்கிணைந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளூர்‌ தன்னாட்சி சட்டம்‌ இயற்றப்படும்‌.

2. நகர்ப்புற உள்ளூர்‌ தன்னாட்சி அமைப்புகளில்‌, குறிப்பிட்ட கால இடைவெளிகளில்‌ வார்டு குழுக்கள்‌ மற்றும்‌ பகுதி சபைகள்‌ நடைமுறைபடுத்தப்படும்‌.

3. குடிமக்களுக்கு தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக (ஸ்மார்ட்போன்கள்‌ மூலம்‌) அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்களும்‌ ஆன்லைன்‌ ஆக்கப்படும்‌.

4. வெள்ளத்தின்‌ தாக்கத்தைத்‌ தடுக்க, குறிப்பாக சென்னையில்‌ இந்த தாக்கத்தைத்‌ தணிக்க சிங்கப்பூரில்‌ இருப்பதுபோன்ற சர்வதேச தரம்‌ வாய்ந்த நிரந்தரத்‌ தீர்வுகள்‌ செயல்படுத்தப்படும்‌.

5. ஒவ்வொரு 5 வருடங்களுக்கும்‌ அனைத்து நகர்ப்புற தன்னாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள்‌ கட்டாயமாக்கப்படும்‌.

6. சுத்தமாகவும்‌ பசுமையாகவும்‌ மாற வேண்டும்‌ என்ற சுற்றுச்சூழல்‌ உணர்திறனில்‌ சர்வதேச தரங்களை ஏற்று, குடிமக்கள்‌ மற்றும்‌ தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்‌ பங்களிப்புடன்‌ செயல்படும்‌ அனைத்து டவுண்‌ பஞ்சாயத்து, நகராட்சி அல்லது கார்ப்பரேசனும்‌ அரசாங்கத்தால்‌ பெருமளவில்‌ ஆதரிக்கப்படும்‌.

7. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி சுய நிர்வாக அதிகார வரம்புகளிலும்‌ போக்குவரத்து நிர்வாகத்தில்‌ சர்வதேச தரங்கள்‌ பின்பற்றப்படும்‌.

இவை அனைத்தும் மக்கள் நீதி மய்யக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...