கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வரிடம் மனு.
கோவை: கோவையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று 23-ஆம் தேதி கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டமைப்பு அமைப்பினரிடம் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதன் பிறகு, சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பினர் சார்பில்பல்வேறு விதமான கோரிக்கைகளை அடங்கிய மனுவைமுதலமைச்சரிடம் கொடுத்துள்ளனர். சி.ஏ. ஏ, என்.ஆர். சி. என்.பி.ஆர் எதிராக போராடிய இஸ்லாமிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் அம்மனுவில் இடம்பெற்றுள்ளன.

அந்த கோரிக்கைகள் வருமாறு:-
- இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- கோவையில் நாங்கள் மசூதி கட்டி தொழுகை நடத்துவதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மனுக்கள் கொடுத்து காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். எனவே, தொழுகை நடத்துவதற்கு முழுமையான அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
- மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் இஸ்லாமிய அமைப்பினர், மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால், அரசு சார்பாக சட்டசபையில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
- சி.ஏ. ஏ, என்.ஆர். சி. என்.பி.ஆர் எதிராக போராடிய இஸ்லாமிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- ஆயுள் தண்டனை முடிந்து சிறையில் இருக்கக்கூடிய கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும், உட்பட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இன்னாத் துல்லஹ், சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.