நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் யானை மீது தீ மூட்டிய வழக்கில் கைதான இருவரும் குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்தது. அதற்கு வனத்துறையினர் பழங்களுக்குள் மருந்து மாத்திரைகளை மறைத்து வைத்து, கும்கி யானையின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வந்தனர். இருப்பினும் குணமடையவில்லை.
மேலும், யானையின் இடது பக்க காதில் பலத்த தீக்காயம் இருப்பதையும், காதின் சிறிய பகுதி துண்டாகி கீழே விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 19-ம் தேதி காட்டு யானையைப் பிடித்து சிகிச்சை அளிக்க லாரியில் ஏற்றி முதுமலைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிலரைப் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மசினகுடி மாவனல்லா பகுதியில் இரவு தனியார் விடுதி அருகே காட்டு யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து காட்டு யானை மீது வீசினர். இதில் காதில் தீப்பற்றியது. வலி தாங்க முடியாமல் காட்டு யானை பயங்கரமாக பிளிறியவாறு அங்கிருந்து ஓடிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாக பரவியது.
இதனிடையே, புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர்கள் காந்தன், மாரியப்பன் உள்ளிட்ட வனத்துறையின் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில் மசினகுடி தர்கா ரோட்டை சேர்ந்த பிரசாத் (36), மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ரேமண்ட் டீன் (28), ரிக்கி ராயன் (31) ஆகிய 3 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் பிரசாத், ரேமண்ட் டீன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரிக்கி ராயனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கூடலுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.