கோவை: கோவையில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கோவை காளப்பட்டி சாலையில் சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:
தொழில்துறையில் ஜி.எஸ்.டி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெரிய தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டியால் பாதிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி மாற்றி அமைக்கப்பட வேண்டும். வரி குறைப்பு செய்ய வேண்டும். ஜி எஸ் டி குறைப்பை அமல்படுத்த சரியான திட்டம் எங்களிடம் இருக்கின்றன. குறைந்த வரி சலுகையை தர வேண்டும். மக்களை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும். ஆனால், பாஜக இதை புரிந்து கொள்ளமாட்டர்கள். அவர்களுக்கு, இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க தெரியவில்லை. பேங்கிங்க் சிஸ்டம் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளன.
அரசின் பொருளாதார நடவடிக்கை சிறு குறு தொழில் நிறுவனத்தாரை பாதிக்கின்றது. இதனால், பெரு நிறுவனத்தாருக்கு சாதகமாக செயல்படுகின்றன.
பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் சிறு, குறு தொழில் முனைவோரை பாதுகாக்க நல்ல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாஜக அரசு, நம் நாட்டின் சிறு குறு நிறுவனங்களுக்கு அதனை செய்யவில்லை. வேற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை என்பது முக்கியம், அதை இந்தியா முழுவதும் சரியாக இருக்கும் பட்சத்தில் பொருளாதாரம் குறிப்பிட்ட விசயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால், அனைத்தும் பாதிக்கப்படும். ஒரே நாடு ஒரே மொழி தத்துவத்தால் பல பிரச்சினைகள் வர கூடும். பொருளாதாரம் முன்னேற்றம் அடையாது.

நாங்கள் குறைந்த வரி சலுகையில் ஜிஎஸ்டி கொண்டு வந்து விடுவோம். மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறையும். குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்க வேண்டும். தங்கத்திற்கு நிகராக மூலப்பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
நாடு முழுவதும் ஒரே வரி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமான குறைவான வரி கொள்கையை கொண்டு வருவதே எங்கள் இலக்கு. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்தாமல் நாட்டை முன்னேற்றம் அடையச் செய்ய முடியாது. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.