திருப்பூரில் 5வது நாளாக தொடரும் பிஏபி பாசன விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்: சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக முதலமைச்சர் உறுதி!

திருப்பூர்: திருப்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் பிஏபி பாசன விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் பிஏபி பாசன விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான பாசனத் தண்ணீரை வழங்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை 5வது நாளாக இன்று புதிதாக 3 பேர் இணைந்து 26 விவசாயிகள் பங்கேற்று உண்ணா நிலையை கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுவரை நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. ஒன்பது சுற்றுகள் வழங்க வேண்டிய தண்ணீரை ஐந்து சுற்றுகள் மட்டுமே வழங்குவதாகவும் அதிகாரிகளே தண்ணீர் விற்பனையில் ஈடுபடுவதாகவும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அலுவலகங்களில் புகார் மனுக்கள் கொடுத்து வந்தனர்.

ஆனால், இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், பாசன தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த உண்ணாவிரத குழுவினர் தங்களுடைய கோரிக்கையை தெரிவித்தனர். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். சுமூக தீர்வு வழங்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....