நீலகிரி: மசினகுடி யானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக அந்தப்பகுதியில் உள்ள விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று காயங்களுடன் சுற்றித்திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து யானையை மீட்ட வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்தது முகாமுக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணைக்கு நடுவே யானைக்கு காயம் ஏற்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதாவது மசினகுடி பகுதிக்கு வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையை விரட்டுவதற்காக விடுதியைச் சேர்ந்த சிலர் யானை மீது தீ வைத்தது தெரியவந்தது. தீ வைக்கப்பட்டதால் தலை மற்றும் காது பகுதிகளில் தீப்பிடித்த அந்த யானை அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தது.

இந்த வீடியோ வெளியானதையடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக மாவல்லா பகுதியைச் சேர்ந்த ரேமண்ட், பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரையன் என்பவரை தேடி வருகின்றனர். யானைக்கு தீ வைத்தது மட்டுமல்லாமல் விதிகளை மீறி அந்த இடத்தில் விருந்தினர் விடுதி கட்டியது தொடர்பாக விடுதியை நடத்தி வந்த சகோதரர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் விடுதி அறைகளுக்குகூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்தனன் மற்றும் மசினகுடி ஊராட்சி செயலாளர் கிரண் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.