பரம்பிக்குளம், ஆழியாறு பாசன வாய்க்காலில் தண்ணீர் திருடினால் மின் இணைப்பு துண்டிப்பு - திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்துக்காக, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது, பரம்பிக்குளம் பிரதான கால்வாய், கிளை கால்வாய்களில் இருந்து முறையற்ற வகையில் தண்ணீர் திருடுவதால், கடைமடைகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில்லை, என கடைமடை விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்துக்காக, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது, பரம்பிக்குளம் பிரதான கால்வாய், கிளை கால்வாய்களில் இருந்து முறையற்ற வகையில் தண்ணீர் திருடுவதால், கடைமடைகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில்லை, என கடைமடை விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், தண்ணீர் திருட்டை தடுத்து நிறுத்தி விவசாயிகளின் நலனுக்காக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் கிடைக்க வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), மின்வாரியம் ஆகிய துறை அலுவலர்களை உள்ளடக்கிய கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன ஆதாரங்களில் இருந்தும் நீர் திருட்டு உள்பட இதர முறைகேடுகளையும், இந்த குழுவினர் சுழற்சி முறையில் கண்காணிக்து, ரோந்துப்பணியில் ஈடுபடுவர்.



மேலும், கால்வாயின் கரைகளை சேதப்படுத்தியும், நேர்முகமாகவும், மறைமுகமாகவும் தண்ணீர் திருட்டு கண்டறியப்பட்டால் முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட தளவாடங்களை கைப்பற்றுவதுடன், கால்வாயில் தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



மேலும், மின்மோட்டார்களை வைத்து தண்ணீர் திருடினால் சம்பந்தப்பட்ட விவசாய பூமியின் மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளயிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...