முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உற்சாக வரவேற்பு!

கோவை: கோவையில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார். அவருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார். அவருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவையில் நாளையும், நாளை மறுநாளும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு நகராட்சி நிர்வாக மற்றும் சிறப்பு செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமானத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கட்சி நிர்வாகிகள், மாநகர் மாவட்ட, புறநகர், வட்டம், ஒன்றியம், பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் வரவேற்பளித்தனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முதலமைச்சருக்கு தாரை தப்பட்டைகள் முழங்க பட்டாசு வெடித்து தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடிசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் மற்றும் சிறு மற்றும் குறு தொழிலதிபர்களைச் சந்தித்து உரையாடினார். பின்னர் புருக் பாண்ட் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வு எடுக்கச் சென்றார்.

இதையடுத்து நாளை காலை டவுன்ஹால் சாலையில் உள்ள கோனியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து தன்னுடைய முதல் நாள் பிரச்சாரத்தை துவக்குகிறார். கோவில் நிர்வாகம் சார்பாக முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை அவர் ஏற்றுக் கொள்கிறார்.

முதல்வர் வருகையையொட்டி கோவை நகரெங்கும் வரவேற்பு மற்றும் தோரணங்கள், அ.தி.மு.க. கட்சி கொடிகள் என அவர் செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கோவை மாவட்ட மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் முதலமைச்சர் 2 நாள் தேர்தல் பிரச்சாரம் செய்வதையொட்டி அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...