நீலகிரியில் காட்டு யானையை நெருப்பு வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியீடு: இருவர் கைது!

நீலகிரி: நீலகிரி மாவநல்லா அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையை நெருப்பு வைத்து துரத்தும் கொடூரமான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவநல்லா அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையை நெருப்பு வைத்து துரத்தும் கொடூரமான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த ஆண் காட்டு யானை வனத்துறையினர் சிகிச்சை அளித்துக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.

இந்நிலையில், தற்போது அந்த யானையை டயர் மூலம் தீ வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக மசனகுடி வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண் காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றித் திரிந்தது.

வனத்துறையினர் யானைக்கு கும்கி யானைகள் மூலம் சென்று மருத்துவக் குழுவுடன் சிகிச்சை அளித்து வந்தனர்.இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் காயப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கும்கி யானைகள் உதவியுடன் யானையை முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்து, 3 கும்கி யானைகளை கொண்டு காயப்பட்ட யானையை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் போது வழியில் யானை பரிதாபமாக யானை உயிரிழந்தது.

இதனையடுத்து, வனத்துறையினர் பரிசோதனைக்குப் பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என கூறினர்.

இந்த நிலையில், யானை குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் பொழுது அதை டயர் மூலம் நெருப்பு வைத்து துரத்தும் காட்சியும், பின்பு யானையின் மீது அந்த நெருப்பை வீசியதும் யானை காதுப் பகுதியில் மளமளவென பிடித்த தீ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி மாவநல்லா பகுதியில் டயரில் தீ வைத்து காட்டு யானையின் மீது வீசிய சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ரைமன், பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...