கோவை: கோவை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றி கோவையை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாவட்ட கலெக்டர் ராசாமணி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- கோவையில் 2019 மட்டும் 2020-ல் நடந்த விபத்துகளை ஒப்பிடுகையில் 34.5 சதவீதம் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது.
மத்திய தரைவழி மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடந்த 18-ம் தேதி தமிழகத்தை சாலை பாதுகாப்பில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்து விருது வழங்கி உள்ளது. பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றி விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு, மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் உமாசக்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கரன், குமரவேல், சரவணன், சிவகுருநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.