சேலம் மாணவருக்கு கொரோனா எதிரொலி: கோவை மாணவர்களுக்கு பரிசோதனை!

கோவை: சேலம் பள்ளி மாணவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து கோவை பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.


கோவை: சேலம் பள்ளி மாணவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து கோவை பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கோவையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 19-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தொற்று ஏற்படாமலிருக்க மாணவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் கோவை மாவட்ட பள்ளிக்கல்வி சார்பில் சுகாதாரத்துறையினர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று நோய்த்தொற்று பரவாமலிருக்க எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர். கபசுரக் குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகளும் வழங்குகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில்:- பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும். காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு ஆரம்ப சுகாதாரநிலைய ஊழியர்களைக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை யாருக்கும் கோவையில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...