கோவை ஹவாலா கொள்ளையில் கேரள கும்பலுக்குத் தொடர்பு: எஸ்.பி அருளரசு தகவல்!

கோவை: கோவையில் காரை வழிமறித்து ஹவாலா கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் கும்பலுக்கு ஹவாலா கொள்ளையில் தொடர்பு இருப்பதாக கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் காரை வழிமறித்து ஹவாலா கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் கும்பலுக்கு ஹவாலா கொள்ளையில் தொடர்பு இருப்பதாக கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு தெரிவித்துள்ளார்.

கோவை மதுக்கரை மரப்பாலம் அருகே கடந்த 17-ஆம் தேதி டிரைவரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்து 10 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக கால்டாக்சி டிரைவர் பாலக்காடு மாவட்டம் மன்னார்காப்டைரைச் சேர்ந்த முகமது முஸ்தபா மதுக்கரை போலீசிடம் புகார் தெரிவித்தார். இந்தக் கொள்ளையில் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்.பி.அருளரசு கூறியதாவது:- கேரள மாநிலம் ஆலப்புழா கண்ணூர் மலப்புரம் பகுதிகளில் இருந்து செயல்படும் 4 பேர் கும்பல் வாகனங்களை வழிமறித்து ஹவாலா பணத்தைக் கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலப்புழாவில் உள்ள கும்பல்தான் மதுக்கரை மரப்பாலம் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. கோவை திருச்சி இடையே உள்ள 200 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி கோவை நவக்கரையில் காரில் கடத்தி வரப்பட்ட ஹவாலா பணம் 27.5 லட்சம் ரூபாயை கேரள கும்பல் கொள்ளையடித்தது. இதையடுத்து ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து விசாரிக்க வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்காக சிறப்பு அலுவலரை நியமித்து அதுகுறித்த ஆவணங்களை அமலாக்கத்துறை சிறப்பு அதிகாரியிடம் விரைவில் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...