கோவை, மதுரையில் ஆன்லைன் டிரேடிங் நடத்தி பலகோடி சுருட்டல்: ஆசாமி கைது!

கோவை: கோவை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் ஆன்லைன் டிரேடிங் நடத்தி பலகோடி ரூபாய் பணத்தைச் சுருட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் ஆன்லைன் டிரேடிங் நடத்தி பலகோடி ரூபாய் பணத்தைச் சுருட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 37). இவர் ஆன்லைன் டிரேடிங் நடத்தி வந்தார். இவர் கோவை எஸ்.எஸ்.குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவருக்குத் தெரிந்த நண்பர்கள் சிலரிடம் அதிக லாபம் பெற்றுத் தருவதாக ஆசைகாட்டி 2.5 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த ஜெகதீஷை தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று ஜெகதீஷை நாகர்கோவிலில் வைத்து போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். இவர் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 40 கோடி ரூபாய்க்குமேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் பத்தாயிரம் வீதம் ஏழு மாதங்களுக்கு வழங்குவார். இரு மாதங்களுக்கு மட்டும் 10 சதவீத வட்டியில் வழங்கியுள்ளார். அதன்பிறகு பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இப்படி கோவையில் 40-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளார். மதுரையில் 11 பேரிடம் ஏமாற்றியதாகவும் சென்னையில் சிலரிடம் ஏமாற்றியதாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...