கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக 32வது சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சி நாள் தோறும் நடைபெற்று வருகிறது.
கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக 32வது சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சி நாள் தோறும் நடைபெற்று வருகிறது.
இன்று, நான்காம் நாள் நிகழ்ச்சியாக கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் மற்றும் பங்குபெற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
அப்பேரணியில், மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் என காவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்தப் இருசக்கர வாகனபேரணி மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கி காந்திபுரம் வழியாக வ.உ. சி மைதானத்தை வந்தடைந்தது.
இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வானது வாகன ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், விபத்து அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அதற்கான காரணங்களை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.