கோவை - புனே இடையே ஜனவரி 29-ந்தேதி முதல் 'கோ ஏர்' விமான சேவை!

கோவை: கோவை - புனே இடையே 'கோ ஏர்' நிறுவனம் வரும் 29-ந்தேதி முதல் விமான சேவையைத் தொடங்குகிறது.


கோவை: கோவை - புனே இடையே 'கோ ஏர்' நிறுவனம் வரும் 29-ந்தேதி முதல் விமான சேவையைத் தொடங்குகிறது.

இதுதொடர்பாக 'கோ ஏர்' இணையதளத்தில் பகிரப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, விமான எண் ஜி 8 881 கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு புனேயைச் சென்றடையும்.



அதேபோல் விமான எண் ஜி 8 882 மதியம் 1.35 மணிக்கு புனேயில் இருந்து புறப்பட்டு மதியம் 3.05 மணிக்கு கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தை வந்துசேரும்.

இதுதொடர்பாக கொங்கு குளோபல் ஃபோரம் (கேஜிஎஃப்) இயக்குனர் டி.நந்தா குமார் கூறும்போது, `கோ ஏர்' இன் இந்த முயற்சியை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். தொற்றுநோய் பாதிக்கப்படுவதற்கு முன்பு காலை நேரம் மட்டும் விமான சேவை இருந்தது.இப்போதைய அறிவிப்பு தொழிலதிபர், மாணவர்கள் மற்றும் பயணம் செய்யும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....