கோவை: தமிழகத்தில் இன்றுவரை`அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என்று கிராம சபைக் கூட்டத்தில் ஒரு கோடியே 87 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று கோவை தி.மு.க. பொறுப்பாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் இன்றுவரை`அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என்று கிராம சபைக் கூட்டத்தில் ஒரு கோடியே 87 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று கோவை தி.மு.க. பொறுப்பாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கோவை தெற்கு மாவட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் தி.மு.க,வினர் கிராமம், கிராமமாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ``தி.மு.க. சார்பில் நடத்தி வரும் கிராமசபைக் கூட்டங்களுக்கு கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவு பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் கூட்டத்தில், அதிகமாக கலந்து கொள்கிறார்கள்.
இன்று வரை ஒரு கோடியே 87 லட்சத்து 970 பேர் `அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள், மொத்தம் 21 ஆயிரத்து 28 இடங்களில் உள்ள கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் அந்தந்த கிராமங்களில் செயல்படுத்தாத குறைபாடுகளை மக்கள் எடுத்துச் சொல்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த அ.தி.மு.க. ஆட்சி ஊழல் மலிந்துவிட்ட ஆட்சி, ஊழலுக்காகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி என்று மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசுக்கு அடிமைபோல் இந்த ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே இந்த ஆட்சியை அகற்றவேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க.வினர் 3 பேர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.'' இவ்வாறு அவர் கூறினார்.