ஸ்டாலின் அமைச்சராக இருக்கும்போது ஏன் கிராம சபை கூட்டம் நடத்தவில்லை: அமைச்சர் வேலுமணி கேள்வி?

கோவை: ஸ்டாலின் அமைச்சராக இருக்கும்போது ஏன் கிராம சபை கூட்டம் நடத்தவில்லை இன்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை: ஸ்டாலின் அமைச்சராக இருக்கும்போது ஏன் கிராம சபை கூட்டம் நடத்தவில்லை இன்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, தேவிபட்டணம், கம்பாலபட்டி உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசின் மினி கிளினிக்குகள் திறப்பு விழா மற்றும் கம்பாலபட்டி கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ரூ 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பால திறப்பு விழா நேற்று நடைபெற்றது.



இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு கிளினிக்குகளை திறந்து வைத்தனர். அத்துடன் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.



இதையடுத்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசினார். ''ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்கள் சபை கூட்டத்தை ஏன் நடத்தவில்லை. தற்போது சிறப்பாக உள்ளாட்சித்துறை செயல்படுகிறது. இதற்காக 143 விருதுகள் வாங்கியுள்ளேன். கிராமசபை கூட்டங்கள் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவருக்கு எத்தனை ஊராட்சிகள் உள்ளது என்பதுகூட தெரியவில்லை.

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பொறுப்பேற்பார்". இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....