பொள்ளாச்சி பாலியல் வழக்கை திசை திருப்பும் அதிமுக அரசையும், காவல் துறையையும் கண்டித்து கோவையில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை திசை திருப்பும் அதிமுக அரசையும் அதற்கு துணை போகும் காவல் துறையையும் கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவள்ளுவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை திசை திருப்பும் அதிமுக அரசையும் அதற்கு துணை போகும் காவல் துறையையும் கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவள்ளுவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி M.L.A மற்றும் நளினி சாரங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், ஒன்றிய பொறுப்பாளர்கள் செட்டியக்காபாளையம் துரை, தேவேசேனாதிபதி, அய்யம்பாளையம் ராசு, மருதவேல், மாநில நெசவாளர் அணி செயலாளர் குள்ளக்காபாளையம் நாகராஜன் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்

இதனிடையே, கூட்டத்தில் பேசிய நெல்லிக்குப்பம் புகழேந்தி, வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கழகத் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி எனவும், அதிமுக ஆட்சியாளர்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் எந்த திட்டத்தையும் கொண்டு வருவதில்லை என்றும் ஒப்பந்ததாரர்கள் பயன்பெறும் வகையில் சாலைகளை திட்டமிட்டு போட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...