கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன்(40). இவர் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று முன் தினம் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அந்த கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்தனர்.
மேலும், கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் துணிகளை கொள்ளையடித்து சென்றனர். நேற்று சம்சுதீன் கடையை திறக்க சென்ற போது இக்கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த பொள்ளாச்சி (மேற்கு) போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.