பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அருளானந்தம் உட்பட மூன்று குற்றவாளிகளுக்கு வருகின்ற 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு.
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலியல் வழக்கில், சிபிஐ யால்கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ள அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் உட்பட மூவரின் நீதிமன்ற காவலை வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நீட்டித்து, கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த சி.பி.ஐபல்வேறு விதமான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து பொள்ளாச்சி அதிமுக பிரமுகர்
அருளானந்தம் (34), ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு (27), ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதன் பிறகு, அருளானந்ததை மட்டும் சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரணை செய்து விட்டு, மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்றுடன் மூவரின்நீதிமன்ற காவல் முடிவதால், பலத்த பாதுகாப்போடு மகிலா நீதிமன்ற நீதிபதி முன்பாக இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர், மூவருக்கும் வருகிற 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சிபிஐ சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, பரிசோதனைக்கு அனுமதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் பலத்த பாதுகாப்போடு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.