கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 5,593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு..!
கோவை: கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் "ஜல் ஜீவன்" திட்டத்தின் கீழ் கோவையில் ரூ 17.04 கோடி மதிப்பில் 5,593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவையில்60 ஊராட்சிகளில் "ஜல் ஜீவன்" திட்டம்
நாட்டில் உள்ள கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீர் இணைப்பு வழங்குவதை நோக்கமாக கொண்டு, மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக நடப்பு நிதியாண்டில் 60 ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் மூலம், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு, ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், மேல்நிலை மற்றும் தரைமட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படுகிறது. இதற்காக, ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ 17.04 கோடி மதிப்பில் 5593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
கோவையில் இதுவரையில் 17.04 கோடி மதிப்பில் 5593 வீடுகளுக்கு, இத்திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் 311 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள 50 ஆயிரத்து 953 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரையில் 5 ஆயிரத்து 593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 158 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், 119 ஆழ்குழாய் கிணறுகள், 56 தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள், 178 பிரதான குடிநீர் குழாய் அமைத்தல் உள்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் திட்டமிடப்பட்ட 1,072 பணிகளில், 70 பணிகள் முழுமையாகவும், 623 பணிகள் பகுதியளவும் முடிவடைந்துள்ளன. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் அனைத்து திட்ட பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.