ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைப்புக்கு பக்கபலமாக இருந்ததால் ஸ்டாலின் தொடர்ந்து குறை கூறி வருகிறார்: அமைச்சர் வேலுமணி பேச்சு!

திருப்பூர்: மூன்றே மாதத்தில் குறுக்குவழியில் முதல்வராக நினைத்த ஸ்டாலின் கனவை தகர்த்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவதற்கும், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைப்புக்கும் பக்கபலமாக இருந்ததால் என்னையும், தங்கமணியையும் ஸ்டாலின் தொடர்ந்து குறைகூறி வருகிறார் என்று திருப்பூரில் தொண்டர்கள் மத்தியில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறினார்.



திருப்பூர்: மூன்றே மாதத்தில் குறுக்குவழியில் முதல்வராக நினைத்த ஸ்டாலின் கனவை தகர்த்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவதற்கும், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைப்புக்கும் பக்கபலமாக இருந்ததால் என்னையும், தங்கமணியையும் ஸ்டாலின் தொடர்ந்து குறைகூறி வருகிறார் என்று திருப்பூரில் தொண்டர்கள் மத்தியில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறினார்.



திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. புதிய அலுவலகம் காங்கேயம் சாலையில் திறக்கப்பட்டது. கோவை, திருப்பூர், நீலகிரி, மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



தி.மு.க. நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளைக்கூறி வருகிறது. தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் அமெரிக்காவின் கஜானாவே போதாது. மேலும் 2016 - 17 ஆம் ஆண்டுக்குப் பிறகே தன் மீதும் அமைச்சர் தங்கமணி மீதும் தொடர்ந்து ஊழல் புகாரை கூறி வருகிறார்கள். அதற்குக் காரணம் மூன்றே மாதத்தில் குறுக்கு வழியில் முதல்வராக நினைத்த ஸ்டாலின் கனவை தகர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முதல்வராக நீடிப்பதுடன் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைந்ததற்கு பக்கபலமாகவும் நாங்கள் இருக்கிறோம். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைக்க உழைத்ததற்காகவும் எங்கள்மீது கோபத்தில் ஸ்டாலின் பொய்யான ஊழல் புகார்களை கூறி வருகிறார்.



மேலும் ஸ்டாலின் துணை முதல்வராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்து இதுவரை தமிழகத்துக்கு எந்த ஒரு சாதனையையும் செய்யாத நிலையில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்து இதுவரை மத்திய அரசிடமிருந்து 143 விருதுகளை பெற்றிருக்கிறேன். மீண்டும் வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக வருவார். அதற்காக நாம் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக பணியாற்றவேண்டும். நமக்கு எதிரி தி.மு.க. என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....