நீலகிரியில் லாரி உரிமையாளரிடம் 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கினார்!

நீலகிரி: நீலகிரியில் லாரி உரிமையாளரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும் களவுமாக சிக்கினார்.



நீலகிரி: நீலகிரியில் லாரி உரிமையாளரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும் களவுமாக சிக்கினார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தவேல். இவர் கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு ஒரு லோடு எம்.சாண்ட் கொண்டு வர 20 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் என்று பேரம் பேசியுள்ளார். தொடர்ந்து இவர் இந்தச் செயலில் ஈடுபட்டதால் வேறு வழியில்லாமல் லாரி உரிமையாளர்கள் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பிரின்ஸ் எலியாஸ் என்பவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். அந்தப் பணத்துடன் பிரின்ஸ் எலியாஸ் இன்ஸ்பெக்டரிடம் போய் பேசியுள்ளார். அவருடன் பேரம் பேசியபோது 10 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் போதும் என்று இன்ஸ்பெக்டர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பிரின்ஸ் எலியாஸ் அந்தப் பணத்தை இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலின் கையில் கொடுத்தவுடன் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் கையும் களவுமாக அவரைப் பிடித்து கைது செய்தனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....