திருப்பூர்: திருப்பூரில் பிஏபி பாசனத்திற்கு காங்கயம் கிளை வாய்க்காலுக்குத் தண்ணீர் முறையாக திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் பிஏபி பாசனத்திற்கு காங்கயம் கிளை வாய்காலுக்கு முறையாக தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரில் காங்கயம் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு முறையான தண்ணீர் திறக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தண்ணீர் திறப்பதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் விற்பனையில் ஈடுபடுவதாகவும், நீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வஞ்சிப்பதாக கூறி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று துவங்கியுள்ளனர்.
பிஏபி பாசனத்தில் மொத்தம் 3.77 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. இதில் நான்கு மண்டலங்களாக பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரில் காங்கயம் கிளை வாய்க்காலில் உள்ள 48 ஆயிரம் ஏக்கருக்கு குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதாக கூறி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு முறை தண்ணீர் திறப்பின் போதும் 7 நாள் அடைப்பு 7 நாள் திறப்பு எனும் நிலையில் இருந்து படிப்படியாக தண்ணீர் வருவது குறைந்து போனது. மேலும், மேல் மடையில் தொடர் தண்ணீர் திருட்டும், அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு விவசாயிகளை வஞ்சிப்பது தொடர்ந்து வந்தது. மேலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி தண்ணீர் திறப்பில் மெத்தனப்போக்கோடு செயல்படுகின்றனர்.
இந்த நிலையில், முறையாக தண்ணீர் திறக்க கோரியும், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காங்கயம், வெள்ளகோவில், ஓலப்பாளையம் மற்றும் மயில்ரங்கம் பகுதிகளைச் சேர்ந்த பிஏபி பாசன விவசாயிகள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கயத்தில் துவங்கியுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக காங்கயம் மற்றும் வெள்ளகோவில் நகரப்பகுதிகளில் சுமார் 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.