சிங்காநல்லூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் பழுதடைந்த ஹவுசிங் யூனிட்; புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் - நா.கார்த்திக் எம்எல்ஏ

கோவை: கோவை சிங்காநல்லூரில் மழையால் பெரிதும் பழுதடைந்ததுள்ள ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி நாளை திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எம்எல்ஏ நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை சிங்காநல்லூரில் மழையால் பெரிதும் பழுதடைந்ததுள்ள ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி நாளை திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எம்எல்ஏ நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.



கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே 17.55 ஏக்கரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் 960 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வீடுகள் தற்போது பாழடைந்து சிதிலம் அடைந்து உள்ளதாக கூறினார்.

வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் அரசின் மோசமான, முறைகேடான கட்டுமானமே காரணம் எனவும் இங்கு குடியிருக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த 2016, 20118 மற்றும் 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நிதி நிலை கூட்டத்தொடரில் இந்த வீடுகளின் நிலை குறித்து சட்டமன்றத்தில் பேசியதாகவும் புதிய வீடுகள் கட்டித்தர சட்டத்தில் இடமில்லை என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்ததாகவும் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பல முறை வலியுறுத்தியும், அங்கு வசிக்கும் மக்களுக்காக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க முன்வரவில்லை என்றார்.

மேலும், அங்கு உள்ளவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால், தமிழக அரசு செவி சாய்க்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.



இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வீடுகள் இடிந்து பெரும் விபத்து ஏற்படும் முன், மழையினால் பெரிதும் சேதமடைந்துள்ள இந்த வீடுகளை உடனடியாக இடித்துவிட்டு, காலதாமதம் இல்லாமல், அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும். அதுவரை, அதே இடத்தில் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்காலிக வீடுகள் அமைத்துத் தர வேண்டுமென்றும் என்று வலியுறுத்தி நாளை(20.01.21) மாலை 4.00 மணியளவில் சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்களைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக முன்னோடிகள், செயல்வீரர்கள், கழகத் தோழர்கள், குடியிருப்பு நகர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு பொது மக்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....