இறந்தவரின் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம்: ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்!

கோவை: கோவை ராமநாதபுரத்தில் இறந்தவரின் ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிசாமி பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


கோவை: கோவை ராமநாதபுரத்தில் இறந்தவரின் ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிசாமி பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கோவை ராமநாதபுரம் பி.ஆர்.நகரில் வசித்து வந்தவர் நாராயணசாமி (வயது 80). இவருக்கு உடல் நிலை பாதித்ததால் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம் இறந்து விட்டார். இதனால் இவரது மகன் ராஜசேகரன், தனது தந்தை பொருட்கள் வாங்கி வந்த தனலட்சுமிபுரம் ரேஷன் கடைக்குச் சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் தனது தந்தை இறந்து விட்டார். எனவே தனது தந்தையின் பெயரில் உள்ள ரேஷன் கார்டுக்கு பொருட்கள், பொங்கல் பரிசு வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் தனது தந்தை பயன்படுத்தி வந்த ஸ்மார்ட் கார்டை சரண்டர் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசான ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவை நாராயணசாமி பயன்படுத்தி வந்த ஸ்மார்ட் கார்டுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக அவர் பயன்படுத்திவந்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைக்கண்ட ராஜசேகரன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஆன்லைன் மூலம் தமிழக வழங்கல் துறைக்கு புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் உத்தரவின்பேரில் வழங்கல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவரின் பெயரில் உள்ள ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிசாமி, சம்பந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர் புஷ்பலதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது குறித்து இணைப்பதிவாளர் பழனிசாமி கூறுகையில், "இறந்தவரின் பெயரில் உள்ள ஸ்மார்ட் கார்டுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் தனலட்சுமிபுரம் ரேஷன்கடை விற்பனையாளர் புஷ்பலதா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்தக் கடையில் வேறுஏதும் முறைகேடுகள் நடைபெற்று ள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்," என்றார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....