கோவை: வாட்ஸ்அப் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்த ஒடிசா வாலிபரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஒடிசாவைச் சேர்ந்தவர் தம்புரா ராவத் (வயது 22). இவர் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இவர் வாட்ஸ் அப் மூலம் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் போலீசார் அவரை தேடி வந்தனர். அப்போது படகுத்துறை அருகே சோதனை செய்தபோது பைக்கில் நின்று கொண்டிருந்த அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் செல்போன் மூலமாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது செல்போன் வாட்ஸ்அப்பைப் பார்த்தபோது பலருக்கு வாட்ஸ்அப் மூலமாக தகவல் தெரிவித்து கஞ்சா பொட்டலங்களை அவர்கள் கேட்கும் இடத்திலேயே கொண்டு சென்று டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.