கோவை: வீட்டின் முன் மது அருந்தியதை. தட்டிக்கேட்ட சமையல்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- மேட்டுப்பாளையம், சிறுமுகை ராஜபாளையம், ஜே.ஜே நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 22) சமையல் தொழிலாளி. நேற்று இவரது வீட்டின் முன்பு 3 வாலிபர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட அரவிந்தன் மற்றும் அவரது நண்பர் பிரதீப்குமார் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்த வாலிபர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அந்த வாலிபர்கள் அங்கிருந்து செல்ல மறுத்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதில் திடீரென அந்த வாலிபர்கள் அரவிந்தன் மற்றும் பிரதீப்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்திவிட்டு ஓடிவிட்டனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அரவிந்தன் மற்றும் பிரதீப்குமாரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து அரவிந்தன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கே.என்.ஜி புதூரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்கிற வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஜே.ஜே நகரைச் சேர்ந்த பூபதி, கோவை ஆர்.எஸ். புரத்தைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் குடி போதையில் கத்தியால் குத்தியது தெரியவந்தது.இதை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.