கோவையில் குடியரசு தினத்தில் இருசக்கர வாகன பேரணி: விவசாய சட்டம் திரும்பப்பெற வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு!

கோவை: மத்திய அரசு விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் குடியரசு தின நாளில் இருசக்கர வாகன பேரணி நடத்த மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.


கோவை: மத்திய அரசு விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் குடியரசு தின நாளில் இருசக்கர வாகன பேரணி நடத்த மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கோவை ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க அலுவலகத்தில் மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் ஐ.என்.டி.யு.சி. தலைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. அப்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டன. தலைநகர் டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இச்சட்டத்தால் இந்திய விவசாயம் கார்ப்பரேட்டுகளின் கைகளில் போய்விடும் என்ற அச்சத்தால் இந்தப் போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்து வருகிறார்கள். இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் மத்திய மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விவசாயிகளின் நலனை அடகு வைக்கும் நோக்கத்தோடு பிடிவாதமாக வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெறாமல் உள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்துவது என விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இதனையேற்று ஜனவரி 26ல் தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தும் அதேநேரத்தில் நாடு முழுவதும் எழுச்சிகரமான போராட்டத்தை முன்னெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக கோவையில் நடைபெற்ற மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் வரும் 22-ஆம்தேதி வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி காந்திபார்க் மையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது,

மேலும், ஜனவரி 26-ஆம்தேதி காலை 9.30 மணிக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பது, விவசாய விரோத சட்டங்களை மத்திய அரசே திரும்பபெறு என்கிற முழக்கத்துடன் கோவை பார்க்கேட் புதிய மேம்பாலம் பகுதியில் இருந்து பவர்ஹவுஸ் வரை தேசிய கொடியேந்தி இருசக்கர வாகன பேரணி நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த இரண்டு உணர்வுப்பூர்வமான முடிவுகளை வலுவோடு நடத்திட மத்திய தொழிற்சங்கங்களின் தொழிலாளர்கள் பெரும் திரளாக பங்கேற்பது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. முன்னதாக இந்த கூட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. மதியழகன், ஏ.ஐ.டி.யு.சி. எம்.ஆறுமுகம், சி.தங்கவேல், சி.ஐ.டி.யு. எஸ்.ஆறுமுகம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எல்.பி.எப். வணங்காமுடி, எச்.எம்.எஸ். கோவிந்தராஜூலு, எம்.எல்.எப். சாஜகான் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....