தீயணைப்புத் துறையின் தீ செயலியை பதிவிறக்கம் செய்து ஆபத்து காலத்தில் இழப்பை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும் - டிஜிபி சைலேந்திர பாபு

நீலகிரி: தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தீ செயலி மூலம் துரிதமாக செயல்பட முடியும் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்தார்.


நீலகிரி: தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தீ செயலி மூலம் துரிதமாகச் செயல்பட முடியும் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்தார்.



உதகை குன்னூர் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தலைவர் சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் தீ செயலியை பதிவிறக்கம் செய்து ஆபத்து காலத்தில் இழப்பை தவிர்க்க தீயணைப்புத் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு 21 ஆயிரம் தீ தொடர்பான அழைப்புகள் பெறப்பட்டு, அதன் மூலம் 279 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதே கால கட்டத்தில் 30 ஆயிரம் மீட்பு அழைப்புகள் பெறப்பட்டு 2200 பேர் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தீயணைப்புத் துறை நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், வீரர்களும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டு மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள இடங்களை பூர்த்தி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....