கோவையில் அதிகாலை ஆம்னி பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் பலி
கோவை: கோவை அருகே இன்று அதிகாலை, மதுக்கரை அருகே ஆம்னி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூதாட்டி மற்றும் டிரைவர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவை கிரப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி, நடராஜன் மற்றும் ராஜாமணி வயது (60). இதில், ராஜாமணி அவரது காரில் பழனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர்களது காரை, பழனியை சேர்ந்த முகமது ஆசிப் வயது (38). என்பவர் ஒட்டி வந்துள்ளார்.
இன்று அதிகாலை, மதுக்கரை அருகே கோவையில் இருந்து கேரள நோக்கி சென்ற ஆம்னி பஸ் கோவை நோக்கி வந்த
ராஜாமணியின் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த கோர விபத்தில், கார் அப்பளம் போல் நொறுங்கியதில்.பலத்த காயங்களுடன் இருவரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் விபத்தை பார்த்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த, மதுக்கரை போலீசார், கிரேன் மூலமாக காரை உடைத்து இருவரையும்மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். அவர்களை, பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.