பொள்ளாச்சியில், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி!

கோவை: பொள்ளாச்சியில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சியில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

32-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், பொதுமக்களுக்கு

பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் இன்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



கோவை சாலை மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் துவங்கிய பேரணி, புதிய சட்ட சாலை, ராஜாமில் ரோடு, பல்லடம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.



இதில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களில், ஹெல்மெட் அணிந்து பேரணி மேற்கொண்டனர்.

பேரணியின்போது குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வட்டார போக்குவரத்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் வழங்கினர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...