கோவை: வால்பாறையில் அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 104- வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 104- வது பிறந்த நாள் விழா அ.தி.மு.க சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலைக்கு வால்பாறை நகர அ.தி.மு.க. செயலாளர் மயில் கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் எம்.ஜி. ஆர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகரச் செயலாளர் மயில் கணேசன், தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ அமீது உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.