கோவை: கோவையில் போலியான கையெழுத்துப் போட்டு வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 3.76 லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த ஹிமான்சு குமார் மோபத்ரா (வயது 49). இவர் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டிலுள்ள கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் அதே வங்கியில் ஒரு பெண் கணக்கு வைத்துள்ளார். இவர் அந்தப் பெண்ணின் கையெழுத்தை போலியாக போட்டு வங்கியில் அவரது உறவினர் எனக் கூறி அந்தப் பெண்ணின் பெயரில் காசோலை வாங்கியுள்ளார். அதன்பிறகு அந்தப் பெண்ணின் கையெழுத்து போல கையெழுத்து போட்டு வங்கியில் 3.76 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார். வங்கியில் வித் ட்ராவல் செக் மூலமாக பணம் எடுக்கும்போது பணம் எடுக்கக்கூடிய நபரே வரவேண்டும் என்று கூறுவது வழக்கம். ஆனால் செக் மூலம் பணம் எடுக்கும்போது அதே நபர் வர வேண்டிய அவசியம் கிடையாது.
அக்கௌன்ட் பே இல்லாமல் தன்னுடைய பெயரை பதிவு செய்து நேரடியாக அந்தப்பெண் வழங்கியதுபோல வங்கியில் போலி கையெழுத்திட்டு பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வங்கிக் கணக்கில் மினி ஸ்டேட்மென்ட் எடுத்துப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் ஒடிசா மாநில வாலிபர் ஹிமான்சு குமார் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நூதன முறையில் அந்தப்பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து காசோலை மூலமாக பணம் எடுத்தது தெரிய வந்தது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசடி உட்பட போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.