கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம்ஆகிய இடங்களில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. சார்பாக சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கி ஏற்பாடு செய்யப்பட்டு முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் கோவையில் வருகிற 22, 23 -ம் தேதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் விவரம் வருமாறு:- முதல்வர் பழனிசாமி 22-ம் தேதி காலை 8 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு ராஜவீதி, செல்வபுரம், சிவாலயா தியேட்டர், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
இதைத்தொடர்ந்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களுடன் ஆலோசிக்கிறார். பிறகு அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறார். இதைத்தொடர்ந்து சுந்தராபுரம். மதுக்கரை மார்க்கெட், கிணத்துக்கடவு செல்கிறார். பிறகு மதியம் 3 மணிக்கு பொள்ளாச்சி புறப்படுகிறார். பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் முடித்து மாலை 5 .50 மணிக்கு பொள்ளாச்சி பல்லடம் ரோடு வழியாக சுல்தான்பேட்டை, சூலூர் நால்ரோடு முடித்து இரவு 9 10-க்கு கொடிசியா வருகிறார். அங்கு கொடிசியா தொழிலதிபர்களை சந்திக்கிறார். அவர்களுடன் கலந்து ஆலோசித்து தொழில் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் குறித்து கருத்தரங்கில் பங்கேற்று அவர்களுடன் உரையாற்றுகிறார். அதன் பின்னர் மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
2-ம் நாளான 23-ஆம் தேதி காலை 8 மணி முதல் புலியகுளம், சிங்காநல்லூர், பீளமேடு, காளப்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து காரமடை அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பிறகு மதியம் 3. 25-க்கு பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சாய்பாபா கோயில், வடவள்ளி பஸ் ஸ்டாப், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் பிரச்சார முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு அரசினர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். பிறகு பிரச்சார முடித்த பின்னர் சென்னை திரும்புகிறார்.