கோவையில் வாகன சோதனை செய்த சப் இன்ஸ்பெக்டருக்கு அடி: மில் அதிபர் கைது!

கோவை: கோவையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆத்திரமடைந்த மில் அதிபர் சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதால் அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆத்திரமடைந்த மில் அதிபர் சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதால் அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள கௌலி பிரவுன் ரோட்டை அடுத்த புண்ணியகோடி ரோடு சந்திப்பில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்துவான், ஏட்டு கந்தசாமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் ஒரு கார் அதிவேகமாக வந்தது. உடனடியாக போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த கார் போலீசாரை தாண்டி நின்றது.

இதையடுத்து போலீசார் அந்தக் காரை சோதனை செய்தனர். தொடர்ந்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சரியான பதில் கூறாததால் காரின் ஆவணங்களைக்காட்டுமாறு கூறினர். இதில் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் காரை விட்டு கீழே இறங்கி நான் அவசர வேலையாகச் செல்கிறேன். பல லட்சம் மதிப்பில் கார் வாங்கி விட்டு ஆவணங்கள் இல்லாமல் இருக்குமா? எனக்கூறி எஸ்.ஐ மகேந்திரனை தகாத வார்த்தையில் திட்டி தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் அவர் சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கினார்.இதைத்தொடர்ந்து இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து எஸ்.ஐ.மகேந்திரன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியைச் சேர்ந்த மில் அதிபர் அந்பித் ஜெயின் என்பவரை கைது செய்தனர். நேற்று மாலை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....