நீலகிரி: பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு உதகையில் 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
நீலகிரி: பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு உதகையில் 1000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை மற்றும் கடும் குளிர் நிலவி வந்ததால், சுற்றுலாப் பயணிகள் இன்றி சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது.

விடுமுறையின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்தனர்.
குறிப்பாக, உதகை சூட்டிங்மட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சமூக இடைவெளியின்றி 1000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
தமிழ்நாட்டில் கொராேனா தொற்று காரணமாக சில சுற்றுலாத் தலங்கள் மூன்று நாட்கள் மூடப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.