கோவை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 23ம் தேதியன்று கோவையில் இருந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்காக தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் 3 நாட்கள் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வரும் 23ம் தேதி கோவை வரும் ராகுல், அங்கு ஏற்பாடு செய்யப்படும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். பின்னர் அன்றைய தினமே சிறு, குறு தொழில் முனைவோரை சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து, 24 மற்றும் 25ம் தேதிகளில் திருப்பூர், ஈரோடு, கரூர். திண்டுக்கல் மாவட்டங்களில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.