கோவையில் ஜனவரி மாதம் இதுவரை இல்லாத அளவு 135.6 மி.மீ. மழை பெய்துள்ளது - வேளாண் பல்கலைக்கழகம் தகவல்
கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 306 மி.மீ. பெய்துள்ளதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்தெரிவித்துள்ளது.
இது குறித்து வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையதலைவர் ராமநாதன் கூறியதாவது: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியவடகிழக்கு பருவமழை தற்போது வரை பெய்து கொண்டு இருப்பதாகஇந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது வரை கோவை மாவட்டத்தில் 306 மி.மீ. வடகிழக்குபருவமழை பெய்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் வடகிழக்கு பருவமழை முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தை தாண்டி ஜனவரி 2-வது வாரம் வரை வடகிழக்கு பருவமழைபெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில், கடந்த அக்டோபர் மாதம் கோவையில் 146 மி.மீ. மழைபெய்திருக்க வேண்டும். ஆனால், வடகிழக்கு பருவமழை கால தாமதமாக துவங்கியதால் 36 மி.மீ. அளவிற்கு தான் மழை கிடைத்தது. இதையடுத்து, நவம்பர் மாதத்தில் சராசரியாக 103 மி.மீ. மழையும்,டிசம்பரில் 32 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
ஆனால், ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக 135.6 மி.மீ. மழை பெய்துள்ளது.கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 4 மி.மீ தான் மழை பெய்தது, என்பது குறிப்பிடத்தக்கது, இவ்வாறு அவர் கூறினார்.