திராவிட கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை - கோவையில்  காயத்ரி ரகுராம்

திராவிட கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை - கோவையில் பாஜகவின் காயத்ரி ரகுராம்



கோவை: திராவிட கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை எனவும், பெண்கள் முன்னேற்றத்திற்காக பா.ஜ.க பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது, என பாஜக இலக்கிய கலாச்சார பிரிவு மாநில தலைவர் காயத்திரி ரகுராம் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அரசூரில் பா.ஜ.க சார்பில் நேற்று நடத்தப்பட்ட பொங்கல் விழாவில், அக்கட்சியின் கலாச்சார பிரிவு மாநில தலைவர் காயத்திரிரகுராம் கலந்து கொண்டார். பின்னர், பேட்டியளித்த அவர், எந்த கட்சியும் செய்யாத அளவிற்கு, பாஜக சார்பில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களை கொண்டாடுவதன் மூலம், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உயர்த்தி வருகின்றோம், என தெரிவித்தார்.



அனைத்து தமிழர்களும் சுதந்திரமான பொங்கலை கொண்டாடி வருகின்றனர், என தெரிவித்த அவர், மத்திய அரசின் வேளாண் மசோதா விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார். பொங்கல் கொண்டாடுவது ஓட்டுக்காக அல்ல எனவும், பா.ஜ.க எப்போதும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் எனவும், ஆனால் நாங்கள் இப்போது அனைவரும் கவனிக்கும்படி கொண்டாடி வருகின்றோம், எனவும் தெரிவித்தார். 

திமுகவை பார்த்து மக்கள் வெறுத்து போய் இருக்கின்றனர் எனவும், அதனால் இந்த விழாவில் நிறைய பேர் கலந்து கொண்டுள்ளதாகவும், எல்லாரும் சேர்ந்து கொண்டாடும் போது இந்த விழா பெரிதாக கவனிக்கப்படுகின்றது, என்று கூறினார்.



துக்ளக் ஆசிரியர், குருமூர்த்தி சசிகலா குறித்து சர்ச்சையான பேச்சுக்கு பதிலளித்த அவர், அந்த விழாவில் தான்கலந்து கொள்ளவில்லை என கூறினார். யாராக இருந்தாலும், பெண்களை விமர்சிக்க கூடாது எனவும் தெரிவித்த அவர், துக்ளக் விழா குறித்து கேள்வி எழுப்பும் ஊடகங்கள் உதயநிதி குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்று கேள்வி எழுப்பினார். 

பொதுவாக திராவிட கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை எனவும், அம்மா ஜெயலலிதா இருந்த போது மரியாதை கொடுத்தார்கள், இப்போது யாரும் கொடுப்பதில்லை, என்றார். பெண்கள் முன்னேற்றத்திற்கு பா.ஜ.க பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது என, காயத்திரி ரகுராம் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...