பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சியில், காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த விளையாட்டு போட்டிகள்.
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காவல்துறை கோட்டத்திற்கு உட்பட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் மற்றும் காவல்துறை குடும்பங்கள் பங்கேற்ற பல்திறன் விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது.
பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள என்.ஜி.எம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், காவல் துறை குடும்பத்தினரும், பொதுமக்களும் பங்கேற்றனர். லெமன் ஸ்பூன், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், குழந்தைகளுக்கான பலூன் உடைத்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

மேலும், பொதுமக்கள் மற்றும் காவல்துறை குடும்பங்கள் கலந்துகொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவில் மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, டி.ஐ.ஜி கார்த்திகேயன்,கோவை எஸ்.பி அருளரசு, பொள்ளாச்சி டி.எஸ்.பி சிவகுமார் மற்றும் பொள்ளாச்சி சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா பரிசுகளை வழங்கினார்.