சாக்கடை என்று குருமூர்த்தி விமர்சனம் செய்தது, வாசகர் கேட்ட கேள்விக்கு அவரின் தனிப்பட்ட பதில் - கோவையில் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை

சாக்கடை என்று குருமூர்த்தி விமர்சனம் செய்தது, வாசகர் கேட்ட கேள்விக்கு அவரின் தனிப்பட்ட பதில் - கோவையில் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை



கோவை: துக்ளக் விழாவில் சாக்கடை என்று குருமூர்த்திவிமர்சனம் செய்தது, வாசகர் கேட்ட கேள்விக்கு குருமூர்த்திசொன்ன பதில். பாஜகவை பொறுத்தவரை, அது பத்திரிக்கையின் ஆசிரியர், வாசகருக்கு சொன்ன பதில்", என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை கோவையில் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் நம்ம ஊரு பொங்கல்

கோவையை அடுத்த அரசூரில் பா.ஜ.க விவசாய அணி சார்பில் நம்ம ஊரு பொங்கல் என்ற பெயரில் பொங்கல் விழா கொண்டாட்டம் நேற்று, சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில், பா.ஜ.க தேசிய குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க கலாச்சார பிரிவு மாநில தலைவர்காயத்ரி ரகுராம் உட்படகட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



விழாவில், ஏராளமான பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக மேளதாளத்துடன் வந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். பொங்கல் விழாவில் நாட்டுமாடுகள், குதிரைகள்,மாட்டுவண்டிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பதுடன், பொது மக்கள் பொங்கல் வைத்தும் கும்மியாட்டம் ஆடியும்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில்: தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது எனவும் இந்த பொங்கல் விழா மூலம்மக்கள் மத்தியில் எழுச்சி எழுந்துள்ளது என்று தெரிவித்தார்.

இது ஓட்டுக்கான விழா இல்லை..!

இன்று நடைபெறும் "நம்ம ஊரு பொங்கல்" நிகழ்ச்சிக்கு பெற்றோர்கள் அடுத்ததலைமுறையான குழந்தைகளை அழைத்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த பொங்கல் விழாவைை, ஓட்டுக்காக செய்யவில்லை எனவும், தமிழக கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

காங்கிரசின் குழப்பமே ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு காரணம்

2011ல் காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிகட்டுக்கு தடை ஏற்படுத்தி குழுப்பம் ஏற்படுத்தப்பட்டது எனவும், ராகுல் இது புரிந்ததாக தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், காங்கிரஸ் 2011ல் செய்த குழப்பம் காரணமாக கிராம புறத்தில் காளைகள்இல்லாத நிலை ஏற்பட்டு,இப்போது தான் மீண்டும் காளைகள் இனம் மீண்டும் தழைக்க துவங்கி உள்ளது, எனவும் தெரிவித்தார்.



விவசயத்தை பற்றி எதுவும் தெரியாத உதயநிதியுடன் சேர்ந்து கொண்டு பா.ஜ.க தான் தமிழர் கலாச்சாரத்தை அழிக்கின்றது என ராகுல்காந்தி சொல்கின்றார், இதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? எனவும் கேள்வி எழுப்பினார். 2011ல் காங்கிரஸ் கட்சி செய்தது தவறு என்பதை ராகுல்காந்தி உணர்ந்தாரா ? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

குருமூர்த்தியின் சர்ச்சை பேச்சு

துக்ளக் விழாவில் குருமூர்த்தி, மறைமுகமாக சசிகலாவை "சாக்கடை" என்று விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆசிரியாராக அவர்வாசகருக்கு பதில் சொல்லி இருக்கின்றார், இதில் பா.ஜ.க பதில் சொல்ல அவசியமில்லை, என்று தெரிவித்தார். மேலும், அது குருமூர்த்தியின் தனிப்பட்ட கருத்து என்பதே பா.ஜ.கவின்நிலைப்பாடு, எனவும் தெரிவித்தார்.

மேலும், பா.ஜ.க அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கின்றோம், பெண்களை பற்றி யார் பேசினாலும் தவறு எனவும், அவர் அப்படித்தான் சொன்னாரா?என்பதும் தெரியாது எனவும் தெரிவித்தார்.

சூலூர் தொகுதியில் போட்டியா?

சூலூர் தொகுதியில் கட்சியை வலுப்படுத்த முயற்சி மேற்கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்த அவர் சூலூர் தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுவதை மறுத்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...