சேவல் வைத்து சூதாட்டம், சீட்டு விளையாடிய 40 பேர் கைது!

கோவை: சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சீட்டாட்டம் மற்றும் வேறு வகை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 40 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சீட்டாட்டம் மற்றும் வேறு வகை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை புறநகர் பகுதியான கோமங்கலம் அன்னூர் ஆகிய பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் குழுக்கள் அமைத்து சாதாரண உடையில் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோமங்கலம் போலீசார் நல்லாம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு மைதானத்துக்குச் சென்றனர். அங்கு 11 பேர் கொண்ட கும்பல் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் சூதாட்டத்துக்காகப் பயன்படுத்திய 27 மோட்டார் சைக்கிள், 20ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று அன்னூர் போலீசார் மூலக் குரும்பாளையம் பகுதியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு சேவல் மற்றும் 200 ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். கோமங்கலம் போலீசார் பொள்ளாச்சி கஞ்சம்பட்டி நெசவாளர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 13 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்து 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூபாய் 8,491 பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று பேரூர் போலீசார் சுண்டக்காமுத்தூர் பகுதிகளில் சோதனை செய்த போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 11 ஆயித்து 550 பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து ரூபாய் 42 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...