கோவையில் தீ செயலியை அறிமுகம் செய்து வைத்து தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு!

கோவை: கோவை மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மீட்புப் பணித் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள், தீ செயலியை அறிமுகம் செய்து வைத்து உபகரணங்களை ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மீட்புப் பணித் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள், தீ செயலியை அறிமுகம் செய்து வைத்து உபகரணங்களை ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு மீட்புப் பணித் துறை இயக்குனர் சைலேந்திரபாபு மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு வந்து இன்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் அங்குள்ள பாதுகாப்பு உபகரணங்களை அனைத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அவைகள் நன்றாக செயல்படுகிறதா என பார்வையிட்டார்.

பின்னர், தீயணைப்புத் துறையின் சார்பாக தீ செயலியை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களிடமும், பள்ளி மாணவ மாணவிகளிடம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார். தீ செயலியின் உடைய செயல்பாடுகள் எப்படி என்பதைப் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இதில் அங்கு வந்திருந்த மாணவ மாணவிகள் பொதுமக்கள் சந்தேகங்களை கேட்டு பயன் பெற்றனர்.

இதனையடுத்து, தீயணைப்புத் துறை பணியாளர்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக அளித்தனர். பல்வேறு நபர்களுடைய குறைகளை கேட்டு அறிந்துகொண்டார். பிறகு பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் வரவேற்றார். உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி அலுவலர்கள் பாலசுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...