சி.சி.டி.வி. உதவியால் செல்போன் திருடிய 2 பேர் சிக்கினர்!

கோவை: செல்போன் திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: செல்போன் திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை வடவள்ளி பி.என் புதூரைச் சேர்ந்தவர் முத்து வெள்ளத்துரை. தொழிலாளியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தெலுங்குபாளையம் புதூர் பகுதிக்குச் சென்றார். அங்கு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அவரது செல்போன் மற்றும் 300 ரூபாய் திருட்டு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் செல்வபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் முத்து வெள்ளத்துரையின் மோட்டார் சைக்கிளில் இருந்து செல்போன் மற்றும் பணத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மற்றும் அவரது நண்பர் ஹரிஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தபால் ஊழியர் திடீரென சுருண்டு விழுந்து பலி!

கோவை, ஜன. 16- கோவை வெள்ளலூர் எல்.ஜி நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 63). இவர் அழகேசன் ரோட்டில் உள்ள தபால் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று அவர் தனது சைக்கிளில் ரத்தினபுரி கே.கே நகர் பகுதிக்குச் சென்றார். அங்கு அவர் திடீரென சுருண்டு விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெகதீஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...